சென்னை விமான நிலையம் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொழிந்த பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் சேவைகள் மிகவும் சேதமடைந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து 154 பயணிகளுடன் இரவு 11.35 மணிக்கு வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் பெங்கலூர்ருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன்படி அதிகாலையில் கொல்கத்தாவில் இருந்து 167 பயணிகளுடன் வந்த விமானமும், ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் வந்த விமானமும் தரை இறங்க முடியாமல் மீண்டும் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பபட்டது.
Also Read : இந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
இதன்படி, சென்னை விமான நிலையத்தில் மழை ஓய்ந்தபிறகு வானிலை சீரானதும் மூன்று விமானங்களும் மீண்டும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தன. நள்ளிரவில் இருந்து அதிகாலையில் இடி, மின்னல், சூறாவளிக்காற்று பொழிந்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என 8 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.