90s கிட்ஸ்களை காதலால் உருகவைத்த நாயகி.. இன்று தபுவின் பிறந்தநாள்…!

90s கிட்ஸ்களை காதலால் உருகவைத்த நாயகி.. இன்று தபுவின் பிறந்தநாள்...!
90s கிட்ஸ்களை காதலால் உருகவைத்த நாயகி.. இன்று தபுவின் பிறந்தநாள்…!

நடிகை தபுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு. தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கிட்டத்தட்ட கதை தேர்வு, தேர்ந்த நடிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்திய சினிமாவில் 32 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறார்,

மேலும் ஆறடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், கூல் ஆட்டிட்யூட் என தனித்துவ அழகால் தமிழ் ரசிகர்களை ஈர்த்து ஒற்றைப் படத்தில் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டார் தபு. நடிகை தபு 1971 ஆம் ஆண்டு பிறந்தார் இன்று தனது 53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதோடு ஆண்டுதோறும் வயது கூடுவதற்கு எதிர்பதமாக உபயோகிக்கப்படும் ரிவர்ஸ் ஏஜிங் எனும் சொற்றொடருக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குபவர் தபு.

இளமைக் காலம்: 

தபுவின் இயற்பெயர் தபுசம் பாத்திமா ஹாஸ்மி. இவர் நவம்பர் 4 1971 ஆம் ஆண்டு ஜமால் அலி ஹாஸ்மி மற்றும் ரிஸ்வானா ஆகிய இஸ்லாமியப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். மேலும் இவர் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷப்னம் ஆஸ்மி – பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் தம்பதியின் உறவுக்காரரான தபு தன் 11 ஆம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதோடு 1994 ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு ஜோடியாக ‘பெஹலா பெஹலா ப்யார்’ எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அனால் அவரது முதல் படம் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து முதல் 2 ஆண்டுகளில் பாலிவுட்டின் பிரபல நடிகையாக உருவெடுத்த தபு 1996 ஆம் ஆண்டு தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைந்தார்.

Also Read >> Kaavaalaa Video Song | பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்டிங்கில் கலக்கும் காவாலா வீடியோ பாடல்…!

ஆறடி உயர அழகி:

இரு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காதலிக்கும் நாயகியாக தபு நடித்த படம் தான் காதல் தேசம். அப்படம் இளசுகளின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆறடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், கூல் ஆட்டிட்யூட் என தன் ஆஜானுபாகுவான அழகுடன் தன் நடையாலேயே தமிழ் ரசிகர்களின் இதயங்களை மொத்தமாக கட்டிப்போட்டுவிட்டார் தபு. மேலும் தெலுங்கு சினிமாவுக்கும் எண்ட்ரி தந்த தபு நடிகர் நாகர்ஜூனாவின் ஆதர்ச ஜோடியாக மாறினார்.

அப்பாஸ் முதல் அஜித் வரை:

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல இயக்குநர்களின் முதல் தேர்வாக மாறினார் தபு. அதோடு கமர்ஷியல் படங்களிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் நடித்தார். காதல் தேசம் அப்பாஸ் தொடங்கி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அஜித் ஏன் பாலிவுட்டின் உச்ச நடிகரான அமிதாப் உடன் ‘சீனிகம்’ திரைப்படம் வரை எல்லோருடனும் சிறப்பான ஈக்குவேஷனை திரையில் கொண்டுவந்து காதல் தேவைதையாக வலம் வந்தார் தபு.

மேலும் அவர் மறைந்த நடிகர் இம்ரான் கானுடன் இணைந்து ‘நேம் சேக்’ ‘லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இளமையழகைத் தாண்டி தன் 50 களிலும் தனித்துவ கதாபாத்திரங்களால் தொடர்ந்து பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் தபு, அந்தாதூன் தெலுங்கில் ‘அல வைகுந்தபுரம்லோ’ சென்ற ஆண்டு அதிக வசூலை ஈட்டிய பாலிவுட் படங்களில் ஒன்றான ‘பூல் புலைய்யா 2’ ஆகிய படங்களில் நடித்து தொடர்ந்து இன்றைய நாயகிகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

அத்தகைய தபு தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளில் நடித்து இதுவரை 2 தேசிய விருதினையும், பத்மஸ்ரீ விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைகளைச் சுமக்கும் நடிகை தபு இன்று தனது 53 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை அனைத்து மொழி ரசிகர்களும் வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்