தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமாரி மாவட்டமானது, சர்வதேச சுற்றுலாத் தளமாக விளங்குகின்றது. மேலும் இங்கு கடலின் நடுவில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிடும் மற்றும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாதத் தளமாகவும் சிறந்து விளங்குகின்றன.
இந்த இடத்திற்கு பயணிகள் அனைவரும் படகுகளில் மட்டுமே சென்று பார்க்க முடியும். மேலும் இங்கிருக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் கடல்நீர்மட்டம் தாழ்வான காலங்களில் படகுகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கடலின் நடுவில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியாமல் உள்ளனர். இதன் காரணங்களினால் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகிய இரண்டையும் இணைக்கும் விதமாக நடைபாலம் அமைத்துத் தருமாறு சுற்றுலாப் பயணிகள் நெடுங்காலமாக வேண்டுகள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ரூ.37 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகிய இரண்டையும் இணைக்கும் கண்ணாடி இழை நடைபாலம் நிறுவ திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கும் பணியினுடைய தொடக்க விழாவானது நேற்று விவேகானந்தர் மண்டபப் பாறை பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களின் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் இவ்விழாவின்போது பல அதிகாரிகள், மேயர் மற்றும் அமைச்சர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
மேலும் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் இப்பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்திருக்கின்றது. இப்பாலத்தினுடைய அடித்தளமானது திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவைகள் இருக்கும் இரு பாறைகளிலிருந்தும் தொடங்கப்படுகின்றது. மேலும் சுற்றுலாப்பயணிகள் இந்த கண்ணாடி இழை நடைபாலம் மூலம் கீழ் இருக்கும் கடலின் அழகை ரசித்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023
- Railway Recruitment 2023 | இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்