சொகுசு கப்பல் ரெடி? அதுல போக நீங்க ரெடியா? சூப்பரா இருக்கு தெரியுமா…

இந்தியாவில் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு “சாகர்மாலா” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனத்தின் மூலம் மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல்கள் இயக்கப்பட்டு வருகிறது.

hey guys Luxury cruise ready Are you ready to go there You know it's super full details here and enjoy moment

அந்த வகையில், தற்பொழுது சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையில் தொடங்கி இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா திரிகோணமலை மற்றும் காங்கேசன் ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சொகுசு கப்பலில் 11 மாடிகள் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,600 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் போல் ஏராளமான அறைகளும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கப்பலின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் கடலின் அழகை ரசிக்கும் அளவிற்கு கப்பல் முழுவதும் கண்ணாடி சுவர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN