வானிலை ஆய்வு மையத்தின் புதிய தகவல்..! மழை வருமா? மழை வராதா? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலுக்கு இதமாக மழையும் பெய்து வந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வெப்பநிலையும் சற்று குறைந்து காணப்படுகிறது.

hey guys New information from Meteorological Center..! Will it rain Won't it rain You too know..! read it now

அதுவுமல்லாது மழையின் காரணமாக சென்ற இரு நாட்களிலுமே வெயிலினுடைய தாக்கமானது சற்று குறைந்தது. ஆனாலும் 96.44 டிகிரி அளவுக்கு திருத்தணி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் எல்லாம் அதிகமாக பதிவாகி இருந்தன.

தொடர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகியது. மேலும் இது நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய இருக்கிறது. அதற்குப்பிறகு இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய இடங்களை நோக்கி புயலாக நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து வரும் மே 10-ஆம் தேதி அன்று அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் போன்ற பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகின்றது. ‘மோகா’ என இந்த புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏமன் நாடானது இந்த பெயரை அளித்திருக்கிறது.

இந்தப்புயலானது வங்கக்கடல் பகுதிகளில் உருவாகினாலும் மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் பெரிய அளவிற்கு இருக்காது என வானிலை ஆய்வு மையமானது தெரிவித்திருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN