மாதம் ரூ.209200 சம்பளத்தில் TNPSC-யில் அட்டகாசமான வேலை! DON’T MISS IT…

TNPSC RECRUITMENT 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் 52 மூத்த அதிகாரி (Senior Officer) மற்றும் மேலாளர் (Manager) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுத் துறையில் காலியாக உள்ளன. இப்பணிக்கு SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

TNPSC RECRUITMENT 2023
TNPSC RECRUITMENT 2023

TNPSC பணியிடங்களின் விவரங்கள்:

பதவிஎண்ணிக்கை
மூத்த அதிகாரி (Senior Officer)34
மேலாளர் (Manager)18

TNPSC கல்விதகுதி:

முதுகலை பட்டம் (எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., MBA. போன்றவை) அல்லது இணையான தகுதி. விண்ணப்பதாரர் தமிழ்நாடு அல்லது புதுச்சேரியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

TNPSC ஊதிய விவரம்:

1. Accounts Officer Class – III – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
2. Accounts Officer – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
3. Manager – Grade III (Finance) – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
4. Senior Officer (Finance) – ரூ.56,100 – 2,05,700 (Level 22)
5. Manager (Finance) – ரூ.37700 – 1,38,500 (Level 20)

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2023  ஆகும். மேலும் மூத்த அதிகாரி (Senior Officer) மற்றும் மேலாளர் (Manager) பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யபடுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

மேலும் தகவல்களுக்கு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தைப் உள்ள TPSC Notification 2023 Pdf பார்க்கவும்.

முக்கிய குறிப்புகள்:

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், சான்றுகள் மற்றும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் உண்மையான தகவல்களை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தவறான தகவல்கள் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்