உங்களுக்கு தெரியுமா? பருப்பு விலை ஏறுதாம்..! உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

தென்மேற்கு பருவக்காற்று மாறுபாட்டால் ஆகஸ்ட் மாதத்தில் பொழிய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பொழிந்ததால் பருப்பு விலை அதிகரித்து கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் சில்லறை பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத அளவில் கடந்த ஜூலையில் 7.5 சதவீதமாக அதிகரித்தன.

hey peples do you know The price of pulses will go up Read on and find out latest news

அதன்பிறகு, கடந்த ஜூலையில் 9.1 சதவீதம் விலை உயர்ந்த பாசிப்பருப்பும், 34.1 சதவீதம் விலை உயர்ந்த துவரம் பருப்பும் இதன்பிறகும் விலை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். நடப்பு காரிப் பருவத்தில் 114.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டாலும், போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்தபடி விளைச்சல் இருக்காது என்று கூறுகின்றனர்.

அதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் அரிசி, தானியங்கள் விலை வருகின்ற காலத்தில் குறையும் என்று ஆராய்ந்துள்ளார்.