தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், நந்தினி என்ற மாணவி 600 க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அதிக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், அரசு பள்ளியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி வாட்ச், பேக், ஆடைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகைகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மாணவர்களுக்கு வழங்கினார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- மத்திய அரசு வேலையில் விருப்பமுள்ளவரா? உங்களுக்காகவே இந்த வாய்ப்பு வந்துள்ளது!
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023