ஆங்கிலப் புத்தாண்டின் சுவாரஸ்ய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

History Of English New Year In Tamil

புதிய வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதியைத்தான் ஆங்கில புத்தாண்டாக கொண்டாடுகிறோம். மக்கள் அனைவரும் பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரும்பாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக ஆங்கில புத்தாண்டு உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதம், இனம், மொழி என எதையும் பார்க்காமல் கொண்டாடும் ஒரே பண்டிகை இந்த புத்தாண்டு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும், பூக்கள் வழங்கியும் என பல வழிகளில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உலகில் உள்ள பல நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டில் தான் முதலில் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அதாவது நியூசிலாந்து நாட்டில் உள்ள சமோவா என்ற இடத்தில் தான் முதலில் புதிய வருடம் பிறக்கிறது. அதாவது, இந்திய நேரத்தின்படி, டிசம்பர் 31 -ம் தேதி மாலை 4.30 மணியளவில் அங்கு ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அதை தொடர்ந்து அடுத்த நாடான ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறக்கிறது.

காலம் காலமாகவே இப்படித்தான் புத்தாண்டை கொண்டாடப்பட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆங்கில புத்தாண்டு உருவானதற்கு பின்னால் மிகப்பெரிய வரலாற்று கதையே உள்ளது. பலருக்கும் ஆங்கில புத்தாண்டு எப்படி தோன்றியது என்று கேட்டல் தெரியாது என்ற பதிலைத்தான் சொல்வார்கள். அந்த வகையில், ஆங்கில புத்தாண்டு எப்படி உருவானது என்ற சுவாரஸ்யம் நிறைந்த வரலாற்று கதையை தெரிந்து கொள்வோம்.

ஆங்கிலப் புத்தாண்டின் சுவாரஸ்ய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

ரோமானியர்களின் காலண்டர்:

Romans Calenders

ரோமானியர்களின் காலத்தில் தான் காலண்டர் தோன்றியது என்று பலராலும் சொல்லப்படுகிறது். கி.மு. 700 நூற்றாண்டில் ரோமானிய மன்னரால் அறிமுகபடுத்தப்பட்ட காலண்டர் தான் ரோமானிய காலண்டர். இந்த காலண்டரில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ச் மாதம் தான் முதல் மாதமாக இருந்தது. ரோமானியர்கள் சூரியனின் நகர்வின் அடிப்படியில் மார்ச் 1 தேதி புத்தாண்டாக கொண்டாடினார்கள். பிறகு இரண்டு மாதங்களை சேர்த்து 12 மாதங்களாக மாற்றினர். அதில் முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி என்ற பெயரை சூட்டினர். ஜனவரி என்பது ரோமானியர்களின் கடவுளான ஜனஸ் என்ற பெயரின் அடிப்படையில் ஜனவரி என்று பெயர் வைத்தனர். பிறகு 12 மாதங்கள் உள்ள காலண்டர் முறை பின்பற்றப்படுகிறது.

ஜூலியன் காலண்டர்:

Julian Calendar

இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் என்பர் ஜனவரி 1-ஆம் தேதியை முதல் நாளாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிவிட்டார். மக்கள் அனைவரும் ஜனஸ் கடவுளை நினைவுப்படுத்தும் விதமாக இருந்ததால் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அந்த நாளையே புத்தாண்டாக கொண்டாடினார்கள். அவர் பின்பற்றிய காலண்டர் முறை என்பதால் ஜூலியன் காலண்டர் என்று பெயர் சூட்டப்பட்டது.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயேசு பிறந்த நாளான டிசம்பர்-25 தேதியை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்ப்பு வந்தது. அதாவது அந்த நாளை புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25 ஆம் தேதியை வருடத்தின் முதல் நாளாக கடைபிடித்தனர்.

ALSO READ >குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..

கிரிகோரியன் காலண்டர்:

Gregorian Calendar

1500 ஆண்டு வரை எந்த நாளில் புத்தாண்டை கொண்டாடுவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்த வகையில் கி.பி. 1582 ஆண்டில் போப் கிரிகோரி என்பவர் ஜூலியன் காலண்டரை ரத்து செய்தார். பின்னர் அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டை உருவாக்கினார். அதில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களாக மாறியது, இதன் மூலம் ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன. இதில் 12 மாதங்கள் சரியாக பொருந்தின. இவர் உருவாக்கிய காலண்டர் என்பதால் கிரிகோரின் காலண்டர் என்று அழைத்தனர். இந்த காலண்டர் தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

புத்தாண்டு முதல் நாளில் எடுக்கும் சபதம்:

Pledge

புத்தாண்டில் சபதம் எடுப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. அதாவது பாபிலோனியர்களின் கடன்களை அடைத்து வாங்கிய பொருட்கள் அனைத்தையும் திருப்பி கொடுப்போம் என்று புத்தாண்டு நாளில் சபதம் எடுத்தனர். அதை போன்றே நாமும் பல முறை பல சபதம் எடுத்து இருப்போம். அதை சிறிது நாட்கள் கடைபிடித்து விட்டு காற்றில் பறக்க விட்டுவிடுவோம். சபதங்களை கடைபிடிக்க முடியவில்லை என்றால் சபதம் எடுக்க மாட்டேன் என்று ஒரு சபதம் எடுக்க வேண்டும். முதலில் எந்த ஒரு தசபதம் எடுத்தாலும் அதை செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்வில் அனைத்து வளமும் பெருக வேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here