விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை! எப்போது தெரியுமா?

Today News in Tamilnadu

Today News in Tamilnadu
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை! எப்போது தெரியுமா? 2

செப்டம்பர் 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததை மாற்றி, வருகின்ற செப்டம்பர் 18-ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிக்கை பிறப்பித்துள்ளது. ஆதலால் வருகின்ற 18-ஆம் தேதி அன்று, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை கமிஷனர், அனுப்பிய சுற்றறிக்கையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும், வருகின்ற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிககையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தமிழக அரசு பொது விடுமுறை பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்ததை மாற்றி, வருகின்ற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும்’ என தெரிவித்துள்ளார்.