இன்று 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

0
Holiday for schools and colleges in 27 districts today Red alert warning-Rain Information

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில வாரங்களுக்கு முன் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தமிழ் நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வருகிற 14 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடந்ததின் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று (சனிக்கிழமை) பல இடங்களில் அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும்.

இதன் விளைவாக தமிழ் நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நிலவரப்படி, மொத்தம் 26 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here