கனமழையால் இன்று விடுமுறை…! தேர்வுகள் ஒத்திவைப்பு

0
Holiday today due to heavy rain exams postponed-Exam Postponement To Chidambaram AnnaMalai University

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தொடக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வந்தது. குறிப்பாக தீபாவளி காலங்களில் மழை பெய்தது குறிப்பிட தக்கது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்து வருகிறது. இன்று கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலூரில் செயல்பட்டு வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கபப்டும் என்று பல்கலைக்கழக பதிவர் தெரிவித்துள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here