தமிழகத்தில் பள்ளிகளுக்கு இந்த தேதி முதல் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Holidays for schools in Tamil Nadu from this date

தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்பொழுது விடப்படும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் நடைபெற இருக்கும் முழு ஆண்டு தேர்வானது ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி இம்மாத இறுதிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த தேர்வினை முன் கூட்டியே நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல் 4 முதல் 9 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 ந் தேதி முதல் 28 ந்தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN