கடந்த சில நாட்களாகவே இமாச்சல் பிரேதசத்தில் கனமழை பொழிந்து வருகிறது. இந்த தொடர்மழை காரணத்தால் மேக வெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மேலும், நிலச்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குல்லு மாவட்டம் அன்னி நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
Also Read : திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இப்படி ஒரு ஆஃபரா..? தேவஸ்தானம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரளாகி வருகின்றன. மேலும், இந்த வீடியோவில் மலையடிவாரத்தில் உள்ள கட்டிடங்கள் சரிவதை காணமுடிகிறது. இதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பொழியும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.