நடிகர் பரத்தின் ‘மிரள்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்..!

0
How is actor Paraths film Miral movie review-Miral Movie Review

அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் ‘மிரள்’ படம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பரத்க்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

இதற்கு முன், பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்த படம் ‘லவ்’ ‘இது பரத்தின் 50 வது படம். இந்த ‘மிரள்’ படம் இவர்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். ‘மிரள்’ படத்தினை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான இந்த ‘மிரள்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் மிகவும் விறுவிறுப்பாகவும் த்ரில்லராகவும் கொண்டு சென்றுள்ளனர்.

படத்தில் நடிகர் பரத் பொறியியலாளராக நடிக்கிறார், நடிகை வாணி போஜன் அவருக்கு மனைவியாக நடிக்கிறார் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய குழந்தை ஒன்று உள்ளது. அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்க, இவர்கள் மூவரும் நீண்ட நாட்களுக்கு பின் வாணி போஜனின் அப்பாவை பார்க்க சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் நடக்கும் ஒரு ஆபத்து மற்றும் மர்மத்திளிருந்து மூன்று பேரும் எப்படி இதிலிருந்து மீள போறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் இசையமைப்பாளராக பிரசாத் சிறந்த முறையில் இசையமைத்துள்ளார். இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதையை மையக்கருவாக வைத்து ஒரு அசத்தலான திரில்லர் படத்தை கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர்.

நடிகர் பரத் நீண்ட நாட்களா திரைப்படம் எதிலும் நடிக்காத இருந்த நிலையில் இந்த ‘மிரள்’ படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்துள்ளது. நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் இருவரும் இந்த படத்தில் தங்களது 100 சதவீத திறமையை காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here