Home Cinema News சமந்தாவின் ‘யசோதா’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

சமந்தாவின் ‘யசோதா’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

0
How is Samantha film Yasoda movie review-Yasoda Movie Review

சமந்த நடிப்பில் தற்பொழுது வெளியாகியுள்ள படம் ‘யசோதா’. இந்த படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகிய இரண்டு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் சமந்தா சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடிக்கும் இந்த ‘யசோதா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தினை த்ரில்லராகவும், சுவாரசியமானதாகவும் கொண்டு சென்றுள்ளன. இந்த கதையில் வாடகைத்தாயின் பின்னனி உண்மைகள் அதில் வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

யசோதா படத்தின் தொடக்கத்தில் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற பல விசியங்கள் சஸ்பென்ஸாக கொண்டுசென்றுள்ளனர். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்பத் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இதில் சமந்தா பணத்திற்காக வாடகைத்தாயாக ஒப்புகொள்ள அதன்பிறகு அதிலிருக்கும் வியாபரத்தை அறிந்த யசோதா அடுத்து என்ன செய்வாள்? என்ற ட்விஸ்ட் உடன் இடைவெளி விட்டனர்.

பின், இரண்டாம் பாகத்தில் கொலைக்கான காரணம் மற்றும் வாடகைத்தாய் விவகாரம் ஆகிய காட்சிகள் த்ரில்லராகவும் அனைவரும் ரசிக்கும் வகையிலும் இருந்தது. இந்த படத்திற்கு இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் பின்னனி இசை படத்திற்கு ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது.

இந்த படத்தை பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர். அவை,

யசோதா சிறந்த திரில்லர் படம் என பாராட்டியுள்ள நெட்டிசன் ஒருவர், படத்தின் கான்செப்ட் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்ததாக பதிவிட்டுள்ள அவர், சமந்தாவின் நடிப்பு மெர்சலாக இருந்ததாக பாராட்டி உள்ளார். சமந்தா இதுவரை நடித்த படங்களில் யசோதாவில் தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், மொத்த திரைப்படமும் திருப்பங்களும் டுவிஸ்டுகளும் நிறைந்து இருப்பதால் படம் நிச்சயம் ஹிட் என குறிப்பிட்டு, சமந்தாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here