அயலான் படம் எப்படி இருக்கு? படத்தின் Review பாக்கலாம் வாங்க..!

அயலான் படம் எப்படி இருக்கு

R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் தான் அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கேல்கர் மற்றும் இஷா கோபிக்கர் என பலர் அயலான் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ALSO READ : மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ண ரெடியா இருங்க! மாத சம்பளம் 47,838 ரூபாய் தராங்களாம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த படம் பல எதிர்ப்புகளை மீறி தற்போது வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையில் இந்த படம் வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் ஆழ்த்த களமிறங்க உள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள அயலான் படத்தில் சிஜி காட்சிகள் கண்டிப்பாக பேசப்படும்.

அயலான் படம் கதை : பேராசை பிடித்த பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்க்கும் எண்ணத்தில் பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றார்கள். அதில் ஒருவர் ஒட்டுமொத்தமாக அழிக்க திட்டமிடுவதை வேற்று கிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் கவனிக்கிறது. பூமிக்கு வந்து அந்த பொருளை எடுக்க முயற்சிக்கும் போது அந்த வில்லனிடம் ஏலியன் மாட்டிக்கொள்கிறது. ஆராய்ச்சிக்காக ஏலியனை பிடித்து சித்தரவதை செய்யும் வில்லனிடமிருந்து ஏலியனுக்கு எப்படி சிவகார்த்திகேயன் உதவி செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

வில்லனாக ஷரத் கேல்கர் ஆர்யன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஹீரோ அர்ஜுன் உடன் விபத்து காரணமாக சந்திப்பு உருவாகிறது. தனது காதலுக்கு அர்ஜுன் ஏலியனை பயன்படுத்துவதும், யோகி பாபு, கருணாகரன் இணைந்து காமெடி செய்வது குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக கதை உள்ளது. ஒரு கட்டத்தில் முக்கிய கதையை நோக்கி படம் நகரும் போது கடைசி வரை போரடிக்காமல் இருக்க டைரக்டர் புத்திசாலிதனமாக டெம்பிளேட் கதையை என்டர்டெயின் படமாக கொடுத்துள்ளார்.

படத்தின் பிளஸ் : சிவகார்த்திகேயன் நடிப்பும், ரவிகுமாரின் ஸ்க்ரீன் பிளே மேக்கிங் படத்தின் பிளஸ் பாயின்ட் ஆகும். சிவகார்த்திகேயன் டைமிங் காமெடி பொங்கலுக்கு பார்க்க வைக்கும் படமாக மாற்றியுள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்த விதம் வில்லன் ஷரத்தின் நடிப்பும் இந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. படம் வெளிவர பல பிரச்சனைகள் இருந்தாலும் சிஜி காட்சிகள் எல்லாம் செம மாஸாக உள்ளது.

படத்தின் மைனஸ் : படத்தின் எமோசனல் சீன்களில் ஸ்கோர் செய்யும் அளவுக்கு பாடல்களில் ஏ.ஆர் ரஹ்மான் பின்னணி இசை ஸ்கோர் செய்யவில்லை என்பது படத்தின் பின்னடைவாக மாறியுள்ளது. ஆனாலும் இந்த படம் பொங்கலுக்கு மக்களுக்கு ஒரு ஜாலியான ஏலியன் படமாக பார்க்கலாம். சிவகார்த்திகேயன் படம் எப்பொழுதும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படமாக தான் அமையும். இந்த படமும் அப்படி தான் அமைந்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top