Home Festivals அனைவருக்கும் பிடித்த லட்டு செய்வது எப்படி? தீபாவளியின் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிப்பி!

அனைவருக்கும் பிடித்த லட்டு செய்வது எப்படி? தீபாவளியின் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிப்பி!

0

ஸ்வீட் செய்ய தெரியாதவர்கள் கூட ஸ்வீட் செய்யும் அளவிற்கு மிக எளிமையான மற்றும் சுவையான ஸ்வீட் ரெசிபி லட்டுதான். லட்டு பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

தீபாவளி லட்டு செய்வது எப்படி?

How to make everyone's favorite Laddu Diwali special sweet recipe!

தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு – 3 கப்
  2. பேக்கிங் சோடா – 2 பின்ச்
  3. சர்க்கரை – 3 கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விடவும் தண்ணீராக கரைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் 3 கப் சர்க்கரை மற்றும் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும். அடுப்பை விரைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். இப்போது சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கவும், பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் நன்றாக சூடு படுத்தி, அதில் கரைத்து வைத்த கடலை மாவை பூந்தி கரண்டியில் ஊற்றி பொரித்து எடுக்கவும். பொறித்த பூந்தியை சர்க்கரைப்பாகில் சேர்க்கவும். ஒவ்வொரு முறை பூந்தி பொரித்ததும் எண்ணெயை வடித்து அப்படியே சர்க்கரைப்பாகில் சேர்க்கவும்.

பூந்தி லேசாக வெந்ததும் வெளியே எடுக்க வேண்டும், பூந்தியை அதிக நேரம் வேக விடக்கூடாது. பாகில் சேர்த்த பூந்தியை நன்றாக ஆற விடவும். நன்றாக ஆறியதும் அதில் கால்பங்கு கலவையை மட்டும் மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும். அரைத்த கலவையை மீதமுள்ள பூந்தியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை பூந்தி கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு பூந்தி கலவையில் சிறிய மாவு எடுத்து உங்களுக்கு தேவையான அளவில் உருண்டை செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மிகவும் அருமையான பூந்தி லட்டு தயார்.


RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here