விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கோதுமை தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Special Wheat Honey kolukkattai: விநாயகர் சதுர்த்தி என்றதும் நம் அனைவரின் நினைவில் முதலில் வருவது கொழுக்கட்டை தான். ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை செய்து அவருக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். நாம் ஒரு வித்தியாசமான சுவையில் கோதுமை மாவை கொண்டு தேன் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

How to make Ganesha Chaturthi Special Wheat Honey kolukkattai?

Special Wheat Honey kolukkattai
Special Wheat Honey kolukkattai

கோதுமை தேன் கொழுக்கட்டை தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1/2 கப்
வெல்லம் – 3 டீஸ்பூன் (துருவி எடுத்துக்கவும்)
தேன் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 1
திராட்சை – 5
முந்திரி பருப்பு – 5
நெய் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை: Special Wheat Honey kolukkattai

முதலில், அடுப்பை பற்றவைத்து அதன் மீது ஒரு வானொலில் ஒரு டீஸ்பூன் நெய் விட்ட பின்பு முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், துருவி வைத்த தேங்காயை மிக்சியில் அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு வடிகட்டி கொண்டு நன்கு வடித்துக் கொள்ளவும்.

இப்போது, ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டு பின்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அந்த கோதுமை மாவை மிருதுவாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகள் அல்லது சிறிய அளவு மாவை எடுத்து அதை சப்பாத்தி கட்டையில் போட்டு இருபுறமும் கோதுமை மாவை தூவி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர், அதை ஒரு கத்தியை பயன்படுத்தி, மாவு முழுவதும் கீறல் போட்டு சதுரம் / ஸ்டார் / செவ்வக வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 11/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் வெட்டிப்பட்ட துண்டுகளை பாதியாக சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடுங்கள். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்படி கவனமாக கலக்கிவிடவும்.

5 நிமிடங்களுக்கு பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பின் அனலை குறைத்து நாம் தயாரித்து வைத்திருந்த தேங்காய் பால், ஏலக்காய், வறுத்த திராட்சை, முந்திரியை சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேக வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு, எடுத்து வைத்துள்ள தேனை சேர்த்து நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும்.

அவ்வளவு தான்! சுவையான கோதுமை தேன் கொழுக்கட்டை ரெடி.. இந்த குறிப்பு பிடித்திருந்தால், விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு செஞ்சிக்கொடுத்து அசத்துங்க.

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here