Home Festivals பாதுசா செய்வது எப்படி? தீபாவளி 2022 ஸ்பெஷல் ஸ்வீட்!

பாதுசா செய்வது எப்படி? தீபாவளி 2022 ஸ்பெஷல் ஸ்வீட்!

0

தீபாவளி என்றாலே ஸ்வீட்டுக்கு பஞ்சம் இருக்காது. ஸ்வீட் என்றால் யாருக்குதான் பிடிக்காது… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவது ஸ்வீட் மட்டும்தான். தீபாவளிக்கு நாங்கள் சொல்லும் செய்முறையில் ஸ்வீட் செய்து அசத்துங்கள்.

பாதுசா செய்வது எப்படி?

How to make Padusa Diwali Special Sweet!

தேவையான பொருட்கள்

  1. மைதா மாவு – 2 கப்
  2. பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
  4. உப்பு – ஒரு பின்ச்
  5. நெய் – 1/2 கப்
  6. சர்க்கரை – 2 கப்
  7. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  8. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  9. ஃபுட் கலர் – 1 பின்ச்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் நெய்யை லேசாக சூடு செய்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும். ஐந்து நிமிடம் நன்றாக பிசைந்த பிறகு அதை அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும்.

அடுப்பை விரைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

இந்த பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஓரமாக எடுத்து வைக்கவும்.

அடுத்ததாக நாம் பிசைந்து வைத்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வட்ட வடிவில் தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு (மெதுவடை வடிவில்) எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூடானதும் அதில் பாதுஷா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்கும் வரை பொறித்து எடுக்கவும். இதை சற்று நேரம் ஆற விட்டு, பின்பு சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

பாகில் 5 நிமிடம் ஊற விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு வெளியே எடுத்து பார்த்தால் அருமையான பாதுசா ரெடி.


RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here