தீபாவளிக்கு எள்ளு சீடை செய்வது எப்படி?

0

தீபாவளிக்கு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்கும் ஸ்வீட்டுகளை செய்து கொடுக்க விருப்பமா? அதற்கான செய்முறையை இந்த பதிவில் கொடுத்துள்ளோம். இதை நீங்களும் செய்து உங்கள் உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களுடன் இந்த ஸ்வீட்டையும் கொடுத்து மகிழுங்கள்.

எள்ளு சீடை செய்வது எப்படி?

How to make sesame seeds for Diwali

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி – 200 கிராம்
  2. கருப்பட்டி – 150 கிராம்
  3. ஏலக்காய் – 2
  4. எள் – 100 கிராம்
  5. உப்பு – ஒரு பின்ச்
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை

முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அரிசி நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் உலர விடவும். அரிசி லேசாக உலர்ந்ததும், அதை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜரில் சேர்த்து நன்றாக அரைத்து, சல்லடை வைத்து சலித்து எடுக்கவும்.

அடுத்து எள்ளை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும். அடுத்ததாக, ஒரு கடாயில் கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கருப்பட்டி கொதித்ததும் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, எள், உப்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கருப்பட்டி பாகு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த மாவு கலவையை அரை மணி நேரம் ஊறவிடவும். அரை மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும், எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் குறைத்து வைத்து விட்டு, உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

உருண்டை லேசாக வெந்த பிறகு கலந்து விடவும். எண்ணெய் குமிழ் அடங்கியதும் வெளியே எடுத்து ஆறியதும் சாப்பிட்டால் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here