NEET நுழைவுத் தேர்வு என்பது மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வு ஆகும். முதலில் நுழைவுத் தேர்வு என்பது பாடப்புத்தகங்களை முழுவதுமாக படித்து புரிந்து அவற்றை நினைவில் வைத்து உள்ளார்களா என சோதனை செய்வதற்கான ஒரு முறையாகும்.
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்காக மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வு தான் நீட் தேர்வு முறை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வு என்பது பாடங்களை படித்து எழுதும் வகையில் இருக்கும். ஆனால் நுழைவு தேர்வு என்பது பாடத்திட்டங்கள் அனைத்தும் முழுவதுமாக புரிந்து வைத்துள்ளோமா என சோதிக்கும் வகையில் இருக்கும். முதலில் நீட் தேர்வா? என்ற அச்சத்தைக் கைவிட வேண்டும். மேலும் எந்த ஒரு குழப்பம் மற்றும் கவனச்சிதறல் இல்லாமல் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
1. பாடத்திட்டங்களை அறிவோம்:
மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வு மொத்தம் 3 மணி நேர கால அளவைக் கொண்டது. இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய இரு பாடத்திலும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகளும் தாவரவியல், விலங்கியல் பாடத்தில் 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
முக்கியமாக நீட் தேர்வு எழுதும் தேர்வர்கள் 10-வது மற்றும் 12-வது வகுப்பு பாடங்களை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். அதில் மிகவும் முக்கியமாக தலைப்புகளை பற்றி பார்க்கலாம்.
i) இயற்பியல்:
முதலில் இயற்பியலில் வரும் சூத்திரம், கோட்பாடுகள், கணக்குகளை குழப்பம் இல்லாமல் பார்க்க வேண்டும்.
இயற்பியல் என்பது இயக்கம், வேலை, ஆற்றல், மின்னாற்றல், புவியீர்ப்பு நிலை, ஒலியியல், இயக்க விதி இவற்றையே உள்ளடக்கியது. இந்த தலைப்புகளை முழுமையாக புரிந்து அவற்றில் வரும் கணக்குகளை எளிதில் தீர்வு காணவும் கற்கவும் வேண்டும்.
ii) வேதியியல்:
வேதியியல் என்பது சமன்படுகள், வேதிப்பொருட்களின் பயன்பாடுகள், அவற்றின் பெயர்கள் போன்ற தலைப்புகளை முழுமையாக புரிந்து அவற்றில் வரும் கணக்குகளை நன்கு பயிற்சி செய்ய வேண்டும். மேலும், வேதியியல் என்பது வேதியியலில் அணு அமைப்பு, தனிம அட்டவணை, ரெடாகஸ் விசைகள், கனிம வேதியியல், கரிம வேதியியல் போன்ற மூலக்கூறுகளை உள்ளடக்கியது.
iii) உயிரியல்:
தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவுகளில்தான் எளிதில் மதிப்பெண்கள் பெற முடியும். இது வாழ்வியல் சார்ந்தே இருக்கும். மனிதன், தாவரம், விலங்கு என உயிர் உள்ளவைகள் பற்றிய விவரங்கள்தான் வரும். எனவே இந்த தலைப்புகளில் முழுமையாக தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
2. இப்படி கூட எளிதில் மதிப்பெண் வாங்கலாமா?
- தேர்விற்கு முந்தைய நாட்களில் நீங்கள் படித்த அனைத்தையும் திரும்ப ஒரு முறை நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.
- மாதிரி வினாத்தாள், முந்தைய ஆண்டு வினாத்தாள் என இவற்றை சேகரித்து நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.
- நீங்கள் முதலில் தெரிந்த வினாக்களுக்கு நேரத்தை வீணாக்காமல் விடையளித்து விட்டு பின்னர் கடினம் என தோன்றும் கேள்விகளுக்கு சற்றே சிந்தித்து விடையளிக்கவும்.
- விடை தெரிவில்லை என்றால் அதற்கு பதில் அளிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த தேர்வில் மைனஸ் மதிப்பெண் உள்ளது. எனவே எந்த ஒரு குழப்பம் இல்லாமல் விடையளிக்க வேண்டும்.
3. நினைவில் கொள்ள வேண்டியவை:
- கடிகாரம், கேமரா, வளையல், கம்மல் என எவ்வித ஆபரணங்களும் தேர்வெழுதும்போது அணிய கூடாது. பேனா உள்ளிட்ட பொருட்கள் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
- ஆண்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது. அறக்கை சட்டை மட்டுமே அனுமதி.
- மொபைல், கால்குலேட்டர் போன்ற எந்த கருவியும் அனுமதி இல்லை.
- விடைத்தாளின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்கள் சரிப்பார்க்க வேண்டும். குறியீடு தவறாக இருப்பின் அவற்றை கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்தவும். குறியீடுகள், தேர்வு எண் என அனைத்தும் சரிபார்த்த பின் விடையளிக்க வேண்டும்.
எந்த வித அச்சம் இல்லாமல் தெளிவான மனநிலை மற்றும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும்.
RECENT GOVERNMENT JOBS:
- 54 Vacancies Jobs Opening for DHS Vellore Recruitment 2023 | Salary Rs.8500-60000/- Per Month @ vellore.nic.in
- Advance Your Career with Technical Analyst Job at Spices Board of India Recruitment 2023 | Download Application Form Here…
- நாட்டையே உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
- தமிழகத்தில் 12வது படித்தவர்ளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை! மாதம் இருபது ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! APPLY ONLINE NOW
- Find Your Dream Job in Railways with KMRC Recruitment 2023 – Apply for 125 Rail Vacancy…