CBSE 10th Exam Preparation Tips in Tamil | CBSE 10ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது எப்படி?

How to score best in CBSE 10th Exam Preparation Tips in Tamil

CBSE தேர்வு என்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் தேர்வாகும். மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்பது இந்தியாவில் உள்ள தேசிய அளவிலான பள்ளிகளுக்கான கல்வி வாரியம் ஆகும். இந்த தேசிய அளவிலான கல்வி வாரியம் 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த கல்வி வாரியம், இந்தியாவில் சிறந்த கல்வியினை வழங்குவதற்கான ஒரு பாலமாக இருக்கிறது.

CBSE போர்டு 10-ஆம் வகுப்பில் ஆங்கில பாடம் மிகவும் கடினம் என்பது அறிந்த ஒன்றே. எனவே நீங்கள் 10-ஆம் வகுப்பிற்கு தயாராகி வரும் மாணவர்கள் எனில் ஆங்கில பாடத்திட்டத்தில் எளிதில் மதிப்பெண் பெற இந்த பதிவில் சில குறுப்புகள் குறிப்பிடபட்டுள்ளது. நீங்கள் உயர் மதிப்பெண் பெற வேண்டும் என எண்ணினால் இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதன் வழியாக ஆங்கில பாடத்தில் சிறப்பாக பயிற்சி பெறலாம்.

CBSE போர்டு 10-ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தாள் மொத்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது உள்ளன. அதில் முதல் பிரிவு A இதில் பத்து மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் அவை வாசிப்பு பகுதியாக இருக்கும். இரண்டாம் பிரிவு B, இதில் எழுத்து மற்றும் இலக்கண பகுதி இடம் பெறும். மூன்றாம் பிரிவு C இதில் இலக்கியம் சார்ந்த 20 வினாக்களும் இடம் பெறும். மேலும், இந்த மூன்று பிரிவுகளிலும் நம்மை எவ்வாறு தயார் செய்து கொள்வது என பார்ப்போம்.

1. பிரிவு A-க்கு பயிற்சி செய்யும் முறைகள்:

ஆங்கில பாடத்தில் முதல் பகுதியில் கேட்கப்படும் A பிரிவில் பத்தியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அதாவது பத்தி ஒன்று கொடுக்கப்பட்டு அதில் இருந்து குறிப்பிட்ட வினாக்கள் கேட்கப்படும். அதற்கு விடை அளிக்கும் மாணவர்கள் பத்தியை நன்றாக படித்த பின்னரே பதில் அளிக்க வேண்டும். பத்தியை நன்கு படிக்கும் போதே அதை புரிந்து கொள்ளும் திறன் கிடைக்கும். இதன் மூலம் அந்த பத்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.

மேலும், மிககுறைந்த நேரத்தில் பதில் அளிக்க முந்தைய ஆண்டு வினாத்தாள் மற்றும் மாதிரி வினாத்தாள் என எல்லாவற்றையும் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி பயிற்சி செய்வதன் மூலம் விடை அளிக்கும் விதம் எளிதாக இருக்கும்.

2. பிரிவு B-க்கு பயிற்சி செய்யும் முறைகள்:

பிரிவு B-யிற்கு பதில் அளிப்பதற்கு, மாணவர்கள் ஆங்கிலத்தை எப்படி கையாளுவது என்னும் திறனை பெற்றிக்க வேண்டும். ஏனெனில் பிரவு B-யில் இலக்கணம், எழுத்து பகுதி போன்றவை இடம் பெறும். இந்த பகுதியில் கட்டுரை, படிவம், கடிதம் போன்றவை குறித்த கேள்விகள் கேட்கப்படுகிறது. கடிதம் எழுதும் போது, மாணவர் கடிதத்தின் வடிவம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் முன்பே பயிற்சி செய்து தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி பயிற்சி செய்வது மூலம் கட்டுரை, படிவம், கடிதம் இவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றி நன்றாக தெரிந்து இருக்கும். இவ்வாறு எழுதும் போது சொல், வார்த்தை இவற்றில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். பிழைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதிக அளவில் பயிற்சி பெற்று மிகவும் கவனத்துடன் இந்த தேர்வை எழுத வேண்டும்.

3. பிரிவு C-க்கு பயிற்சி செய்யும் முறைகள்:

CBSE போர்டு 10-ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளின் கடைசி பகுதி இது தான். இறுதி பகுதி என்பதால் இந்த வினாக்களுக்கான விடைகள் நீண்ட பதிலா இருக்க வேண்டும். இவற்றை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். நினைவில் வைத்து கொள்வதற்கு அவற்றின் முக்கிய குறிப்புகளை பட்டியல் போட்டு படித்து நினைவில் வைத்து கொள்ளலாம். மேலும் முக்கிய குறிப்புகளை முன்னிலை படுத்துவதன் மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கும். தேர்வுத்தாளை திருத்தம் செய்யும் நபருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும், நீண்ட பதில் எழுதும்பொழுது புள்ளிகள் இட்டு தனித்தனியாக எழுத பதில் தெளிவாக தெரியும். இதிலும், மிக குறிப்பாக கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும். நீண்ட பதிலில் கவிஞர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் ஆண்டுகள் இவற்றை நினைவில் வைத்து அவற்றை முன்னிலை படுத்தி எழுத வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பின்பற்றுவதன் மூலம் சிறந்த மதிப்பெண் பெற முடியும்.

4. மேலும் சில சிறப்பு குறிப்புகள்:

ஆங்கில வினாத்தாள்களை தினந்தோறும் படிக்க வேண்டும். மேலும் அவற்றை எழுத்து பயிற்சி செய்ய வேண்டும். இதனால் எழுதும் முறையின் வேகம் அதிகரிக்கும். தேர்வுதாளை திருத்தம் செய்யும் நபருக்கு தேர்வுதாளின் பக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள் எனவே தங்களின் கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் பதில் புரியும் வகையிலும் அமைய வேண்டும்.

கட்டுரை எழுதும் போது அவற்றிக்கான தலைப்பு, துணை தலைப்பு மற்றும் முன்னுரை என அனைத்தும் முறையாக கொடுத்து எழுத வேண்டும். தலைப்பை எழுதும் போது அவை முன்னிலையாக தெரிய வேண்டும், அதாவது அவற்றிக்கு வேறு வண்ண பேனாக்களை பயன்படுத்தலாம். தேர்வு எழுதி முடித்த பின்பு மீதி இருக்கும் நேரத்தில் அனைத்து வினாவிற்கும் சரியாக விடை அளித்து உள்ளோமா என சரிப்பார்க்க வேண்டும்.


RECENT POSTS IN JOBS TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here