மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது எப்படி? சூப்பரான டிப்ஸ் இதோ..

How To Study For The Exam Supper Tips In Tamil

தேர்வு என்பது மாணவர்களின் அறிவு திறனை சோதிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. பள்ளி படிப்பில் தொடங்கி நுழைவுத் தேர்வு, போட்டி தேர்வு என்ற அனைத்திற்கும் அடித்தளமாக திகழ்வது தேர்வு ஒன்றுதான். எந்த ஒரு துறையாக இருந்தாலும் தேர்வு ஒன்று இருக்கும். எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதற்கு எப்படி தயார் செய்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதாவது படிக்கும் முறைகள் சரியான முறையில் இருக்க வேண்டும். என்னதான் மாணவர்களுக்கு தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் எப்படி படிப்பது, தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது, எப்படி அச்சத்தை எதிர்கொள்வது, எப்படி அதிக மதிப்பெண் பெறுவது என பல்வேறு கேள்விகள் மற்றும் குழப்பங்கள் மாணவர்களின் மத்தில் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்னும் கேள்விக்கு விடையளித்துள்ளோம் வாருங்கள்.

தேர்வு தொடங்கிவிட்டது இனி புதிய பாடங்களை படிக்க நேரம் இருக்காது. இதற்கு வருடம் முழுவதும் படித்தவற்றை நினைவில் வைத்து கொள்வது மிகவும் முக்கியம். ஏற்கனவே படித்தவற்றை மீண்டும் ஒரு முறை படிக்க மட்டுமே நேரம் உள்ளது. கால அவகாசம் இல்லை என்பதால் மாணவர்கள் அனைவரும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நெருங்கி விட்டது எப்படி நம்மை தயார் செய்வது என்ற அச்சம் இருக்கும். அவற்றை எதிர்கொள்ளும் வகையில் சில முக்கிய குறிப்புகளை இந்த தளத்தில் வழங்கியுள்ளோம்.

மாணவர்கள் தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ..

அச்சம் கொள்ள கூடாது:

Dont afraid To Exams

தேர்வுக்கு எவ்வளவு தரவாக படித்திருந்தாலும் இருந்தாலும் அனைவருக்கும் தேர்வு எனும்போது ஒரு அச்சம் இருக்கும். அச்சத்தோடு தேர்வுக்கு செல்லும் போது படித்தது அனைத்தும் சில நேரங்களில் மறந்துவிடும். எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தேர்வை சரியாக எழுத முடியும் என்ற நம்பிக்கை உடன் செல்ல வேண்டும். அச்சம் இல்லாமல் தெளிவான மனநிலையில் தேர்வுக்கு செல்ல வேண்டும். வாழ்வில் வெற்றி பெறுவது மிக நீண்ட ஒரு பயணம். தேர்வுகளில் வெற்றி பெறுவது வாழ்க்கை என்னும் பயணத்தில் சிறு பகுதியாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்ற இந்த மூன்று இருந்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.

மாணவர்களின் பொதுவான கேள்விகள்:

தேர்வுக்கு எப்படி படிப்பது? தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? படித்தவற்றை எவ்வாறு நினைவில் வைத்து கொள்வது? இவ்வளவு பெரியதாக உள்ளது இதை எவ்வாறு படிப்பது? இது போன்ற பல கேள்விகள் மாணவர்களின் மனதில் உள்ளது. இதற்கான தீர்வுகளை இனி காண்போம்.

ALSO READ >புரிந்து படிப்பது எப்படி? படித்ததை நினைவில் வைத்து கொள்வது எப்படி?

தீர்வுகள்:

Solutions

தேர்வில் தேர்ச்சி பெறுவது, முதல் மதிபெண் பெறுவது, முதல் மாணவராக வருவது, வெற்றி பெறுவது என்பது அனைத்தும் மிக பெரிய செயல் அல்ல. அதற்கு முறையான பயிற்சி மற்றும் முயற்சி இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி அடைய முடியும்.

தேர்விற்கு படிக்கும் போது நாம் படிக்கும் அனைத்தையும் புரிந்து படித்தல் வேண்டும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு புரிந்து படிகின்றோமா அது மனதில் நீங்காமல் அப்படியே நிற்கும். மேலும் தேர்விற்கு தயார் செய்யும் போது தேர்விற்கு உரிய பாடத்திட்டத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடநூலிலும் என்ன பாடங்கள்? எத்தனை பாடங்கள்?அவை அனைத்தும் படிப்பதற்கு எவ்வாறு உள்ளது என்று முன்னரே கணித்து கொள்ள வேண்டும். அந்தந்த பாடத்திட்டதிற்கு ஏற்ப நேரத்தை ஒதுக்க வேண்டும். எந்த பாடத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற திட்டமிடுதல் வேண்டும். கற்றலில் வெற்றி பெற திட்டமிடுதலே சிறந்த முறையாகும்.

முயற்சி மற்றும் பயிற்சி இரண்டையும் இணைந்து செயல்படுதல்:

Combining both effort and practice

எந்த ஒரு செயல் செய்வதற்கும் முயற்சியுடன் சேர்ந்து பயிற்சியும் இருந்தால்தான் அதில் வெற்றி நிச்சயம் அடைய முடியும். விடாமுயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் அனைவராலும் சாதிக்க முடியும். பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல், செய்யுள் பகுதிகள் அனைத்தையும் குறிப்பு எடுத்து அதன் பின் படித்தால் நினைவில் இருக்கும். மேலும் ஓய்வாக உள்ள நேரங்களில் மனப்பாட பகுதிகளை எடுத்து பார்த்தல் தேர்வில் மறக்காமல் எழுத உதவியாக இருக்கும்.

ஆங்கில பாடத்தின் வினா விடைகள், தமிழில் உள்ள செய்யுள் பகுதி வினாக்களுக்கான விடைகளை படிப்பதற்கு இந்த முறை பயன்படும். மேலும் செய்யுள் பகுதிகளில் வரும் தலைப்புக்கள், துணை தலைப்புக்கள், ஆகியவற்றை படிபதற்கும் இது பயன்படும். மேலும் தேர்வுகளில் முழு மதிப்பெண் மற்றும் வகுப்பில் முதல் மாணவராக வருவதற்கு பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து அதன்பின் தெளிவாக படிக்கும் வேண்டும்.

ALSO READ >நீங்கள் படிக்கும் போது கவனச்சிதறல் ஏற்படுகிறதா? இதோ அதற்கான தீர்வுகள்…

படிக்கும் முறைகள்:

Methods of Reading

படிப்பதற்கு மிகவும் முக்கியமானது இடம் மற்றும் நேரம் என்பது மிகவும் முக்கிய ஒன்று. வீட்டில் படிக்கும்போது தனிமையான அறை இருக்க வேண்டும். எந்த ஒரு இடையுறும் இருக்க கூடாது. இல்லையேல் வீட்டு தோட்டம் ,வயல்வெளி இது போன்ற தனிமை மிகுந்த சூழலில் படித்தல் மிகவும் நன்று. எந்த ஒரு இடையுறு இல்லாமல் இருக்கும் அமைதியான சூழலில் படிக்கும் போது நன்றாக மனதில் பதியும். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் நேரத்தை தவிர்த்துவிட்டு கணிதம் போன்ற கடினமாக பாடங்களை அவர்களுடன் கலந்துரையாடல் செய்து படிக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேங்களை தீர்த்து கொள்ள முடியும்.

மேலும் படிக்கும் பொது வாய் விட்டு படித்தல் மிகவும் நல்லது. அவ்வாறு செய்யும் போது ல,ள,ற,ர,ன,ந,ண போன்ற உச்சரிப்புகள் சரியாக வரும். மேலும் தேர்வுகளில் எந்த ஒரு குழப்பம் இல்லாமல் சரியாகக எழுத முடியும். மேலும் படித்தவற்றை எழுதி பார்த்து தாங்களே திருத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாம் படிக்கும் போதும் எழுதும் போதும் என்ன தவறுகள் செய்கின்றோம் என்பது தெரியும். மேற்கண்டவற்றை பின்பற்றும்போது எந்த ஒரு குழப்பம் மற்றும் பயம் இல்லாமல் தேர்வை எழுத முடியும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here