தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு இடங்களில் 2 மாதங்களை கடந்த பின்னர் ரீடிங் எடுப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் அரசு முனைப்புடன் மின் மீட்டர்களை “ஸ்மார்ட் மீட்டர்” ஆக மாற்றும் பணிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், மின் நுகர்வோர்களுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைதொடர்ந்து, குறிப்பிட்ட தேதியில் மின் பயன்பாடு மற்றும் கட்டண விவரம் குறித்து மின் வாரிய அலுவலக சர்வர்க்கும், நுகர்வோர்களின் செல்போன் எண்ணிற்கும் “ஸ்மார்ட் மீட்டர்” தகவல் அனுப்பப்படும் என தெரிவித்து இருந்தனர்.
Also Read : மக்களே உஷாரா இருங்க… அடுத்த 7 நாட்களுக்கு கனமழை கொட்ட போகுதாம்..! வானிலை மையத்தின் புதிய தகவல்!!
இந்நிலையில், இந்த “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தால் மின்வாரியத்தில் 15,000 ஊழியர்களின் வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக அரசு மின் ஊழியர்களுக்கான வேலை உத்திரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டம் தாமதம் ஆகுமோ என பலர் கேள்வி எழுப்பிகின்றனர்.