கோயம்புத்தூர்ல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! வாக்-இன் இண்டர்வியூ போக நீங்க ரெடியா?

ICAR-CENTRAL INSTITUTE FOR COTTON RESEARCH JOBS IN COIMBATORE-641 003

மத்திய அரசு வேலை என்பது எல்லாராலும் விரும்பப்படுகிற ஒரு அரசு வேலை ஆகும். ஏனெனில், மத்திய அரசு வேலை என்றாலே மக்கள் மனதில் உயர்வாக நினைக்கிறார்கள். மதிப்பும் மரியாதையும் கூடி வருகிறது.

WALK-IN-INTERVIEW

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.ஐ.சி.ஆர்) நேர்காணலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. யங் புரொபஷனல் I, யங் புரொபஷனல் II பணிக்கு நான்கு காலியிடங்கள் உள்ளன. நேர்காணலில் கலந்துகொள்ள தகுதியான நபர்களை அழைக்கிறது CICR நிறுவனம்.

அவசரமா தமிழ்நாடு அரசின் DHS வேலைக்கு ஆள் வேணுமாம்! வெறும் 10வது படிசிருந்தாலே ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளமாம்!

* இந்தப் பணிக்காக 25,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

* தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலை தரப்படும்.

* CICR அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், B.Sc, Masters Degree, M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் உள்ளபடி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருத்தல் அவசியம். விதிகளின்படி SC/ST/OBC மற்றும் பிற விலக்கு அளிக்கப்பட்ட வேட்பாளர்களின் விஷயத்தில் தளர்வு வழங்கப்படும்.

* நேர்காணல் செல்ல வேண்டிய முகவரியானது ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641003, Tamil Nadu ஆகும்.

* Walk in Interview முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 11.12.2023 (F.N) மற்றும் 12.12.2023 (F.N) தேதியில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியது மிகவும் முக்கியம்.

மேற்கண்ட விவரங்கள் மட்டுமல்லாது CICR Official Notification pdf லிங்கையும் பாருங்கள். பிறகு நேர்காணலுக்கு தயாராகுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top