இது இருந்தால்தான் பொங்கல் பரிசு…! அரசின் திட்டம் இதுதானோ?

If only this is a Pongal gift Is this the government's plan-Pongal Gifts For Ration Card Holder

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து நவம்பர் 19-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்யவும், நடப்பு ஆண்டின் பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டின் பொங்கல் பரிசு தொகையை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த ஆலோசித்தனர். ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்புக் கணக்குகள் இல்லை என்ற புள்ளி விவரம் தெரிகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு உடனடியாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க மண்டல இணை பதிவாளர்கள், பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்று அறிவிருத்தப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here