தங்கத்தோட விலையை கேட்டீங்கினா.. இனி தங்கமே வாங்க மாட்டீங்க..!

If you ask the price of gold.. you will not buy gold anymore..-Today Gold And Silver Price

சமீப காலமாக மக்களுக்கு தங்கத்தின் மேல் இருக்கும் மோகம் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே கடும் உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here