ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா உடனே இத பண்ணிடுங்க… இல்லனா அவ்வளுவுதான்..!

இந்தியாவில் ஒரு தனிமனிதனின் எந்தவொரு தேவைக்கும் தற்பொழுது ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், பாண் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

If you have aadhaar card then do this immediately otherwise thats it watch now

இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read : இனிமே வாட்ஸ் அப் குரூப்பை இப்படியும் கிரியேட் பண்ணிக்கலாமா..? சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்!!

இந்நிலையில், இதுவரை ஆதார் கார்டை புதுபிக்க்காதவர்கள் உடனே மை ஆதார் என்ற இலவச சேவையை மூலம் புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு ரேஷன் கார்டு இணைக்கவில்லை என்றால் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.