ரூபாய் 50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் உங்கள் கையில்! போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம்!

Post Office Scheme

Post Office Gram Suraksha Yojana: இந்தியாவைப் பொருத்தவரை சிறந்த சிறு சேமிப்பு திட்டங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்தான். இதற்கு என்ன காரணம் என்றால் இது அரசின் ஆதரவால் நேரடியாக செயல்படும் ஒரு அமைப்பு, இதனால் மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எப்போதும் பாதுகாப்பு.

Post Office Gram Suraksha Yojana Schemes Program

Post Office Gram Suraksha Yojana
Post Office Gram Suraksha Yojana

சேமிப்பு அல்லது முதலீடு என முடிவு எடுத்த பின்பு அனைவரும் முதலில் விரும்புவது குறைந்தளவில் முதலீடு செய்ய வேண்டும் அதன் மூலம் முதிர்வுத் தொகை அதிகபட்சமாக இருக்க வேண்டும். இது பாதுகாப்பான முதலீடாகவும் இருக்க வேண்டும், பணத்திற்கு உறுதி கிடைக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் இன்று பார்க்க இருப்பது பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் பற்றி.

கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் அல்லது கிராம பாதுகாப்பு திட்டம்

ஒரு நாளைக்கு ரூ.50 மட்டுமே என்ற நோக்கில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும் திட்டம் மூலம் 35 லட்சம் வரை பெரிய வருமானத்தைப் பெறலாம். இவற்றில் இரண்டு வகையான காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன. கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் (Rural Postal Life Insurance Schemes Program) கீழ், பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கிராம் சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana) மிகவும் பிரபலமானது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் 19 வயது அதிகபட்சம் 55 வயதாகும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10,000/- அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சம் ஆகும்.

மாதம் ரூ.1500 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறுவது எப்படி?

பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம். தினசரி சுமார் 50 ரூபாய் வீதம் ஒருவர் 19 வயதில் கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி, 10 லட்ச ரூபாய் பாலிசியை வாங்கினால், அவரது மாத பிரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1,515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 ஆகவும் இருக்கும்.

பின்னர், பாலிசி வாங்கியவர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.31.60 லட்சமும், 58 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.34.60 லட்சமும் முதிர்வுப் பலனைப் பெறுவார்.

5 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டத்தை பிரீமியம் செலுத்தாமல் கைவிட்டால் போனஸ் தொகை கிடைக்காது. பிறகு 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதன் முதிர்வு காலம் ஒரு வருடத்திற்குள் இருக்குமாயின் அல்லது பிரீமியம் நிறுத்தம் ஏற்பட்டால் இந்த வாய்ப்புக்கு தகுதில்லை. பாலிசி முன்னரே சரண்டர் செய்யப்படுமாயின் குறைந்த காப்பீடு தொகை மற்றும் அதற்கு ஏற்ற சதவீக்கதில் மட்டுமே போனஸ் வழங்கப்படும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி ஒவ்வொரு ரூ.1000 க்கும் ரூ.60 போனஸ் வழங்கப்படும். முதலீடு செய்யும் நபருக்கு 80 வயது ஆகும்போது முதிர்வுத் தொகை மற்றும் போனஸ் தொகை கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகை எப்படியெல்லாம் செலுத்தலாம்:

இந்த காப்பீட்டு திட்டத்தில் மாதம் மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்ப அடிப்படையில் பணத்தை செலுத்தும் வசதி இருக்கிறது. பிரீமியம் செலுத்தாமல் விட்டுவிட்டால் இத்திட்டத்தை திரும்பவும் தொடங்குவதற்கு பாக்கித் தொகை முழுவதையும் செலுத்த வேண்டியிருக்கும்.

More Update Information given Jobstamil.in

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!