தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மின் வாரியம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டு வரை வருடந்தோறும் ஜூலை மாதத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டணத்தையே செலுத்த முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில், மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த உள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மின் கட்டணமானது 4 புள்ளி 70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவையில்லாம கரண்ட் யூஸ் பண்ணாதீங்க மக்களே..!
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!