வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்..! நாளை வங்கிகள் இயங்காது! ஏன்?

0
Important information for bank customers Banks will not work tomorrow Why-Banking Services Get Affected Tomorrow

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் (AIBEA) சார்பாக அனைத்து வங்கிகளும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது. நாளை(சனிக்கிழமை) நடக்கும் இந்த வேலை நிறுத்தமானது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

இந்நிலையில், இதை பற்றி பணியாளர்கள் கூறுகையில் AIBEA பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி பணியாளர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனை கண்டித்து உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, பணியாளர்கள் மீதான இந்த வஞ்சகம் மற்றும் பாரபட்சத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி செயல்பாட்டிற்கு, பணியாளர்கள் அல்லாமல் வெளியாட்கள் மூலம் செய்வதாகவும் வெங்கடாசலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here