ரேஷன் கடை குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய தகவல்…

Important information released by Minister Duraimurugan about the ration shop

தமிழக மக்கள் ரேஷன்கார்டுகளை பயன்படுத்தி நியாயவிலை கடைகளில் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழல் கூடம் மற்றும் நியாய விலை கடைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அமைச்சர் துரைமுருகன், ரேஷன் கடைகளில் இதுவரை தரமான பொருட்களை வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம், இனி அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார். இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN