TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட முக்கிய தகவல்…! உடனே பாருங்க!

0
Important information released by TNPSC Exam Controller Kiran Kurala Watch now- Fake Result Publish TNPSC Warning

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யவதற்காக ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையமாகும்.

இந்நிலையில், TNPSC நடத்தும் இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு கடந்த ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதனால் தேர்வு எழுதியவர்கள் நமது பெயர் இடம்பெறவில்லை என்ற குழப்பத்தில் உள்ளனர். பலரும் இது குறித்து பல கேள்விகளை சமூக ஊடகங்களில் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா இந்த தேர்வு முடிவுகள் குறித்து கூறுகையில், தேர்வாளர்கள் இது போன்ற போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் இது போன்ற போலி தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் அனைத்தும் தரவரிசைப்படியே வெளியிடப்படும். இந்த TNPSC தேர்வு முடிவுகள் அனைத்தும் TNPSC-யின் அதிகார்வபூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in இந்த இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்லாலாம்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here