ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். மேலும், பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் பதிவு செய்து செய்யும் வசதியும் உள்ளது.
அந்த வகையில், கடந்த ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது. அதன்படி, மாத ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுக்கான நவம்பர் மாத முன்பதிவு எலக்ட்ரானிக் குலுக்கல் நாளை காலை தொடங்க உள்ளது.
Also Read : டுவிட்டர்(எக்ஸ்) பயனாளர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி..! எலான் மஸ்க் அறிவித்த திடீர் அறிவிப்பு!!
அதுமட்டுமில்லாமல், ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை அற்புத பிரமோற்சவம், ஊஞ்சல் உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நவம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டோக்கன் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.