TNPSC தேர்வு எழுத போறீங்களா? அப்ப இந்த முக்கிய அறிவுரைகளை ஸ்கிப் பண்ணாம படிங்க! ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம்!

TNPSC Latest News in Tamil 2022 | Tamilnadu Government Jobs 2022

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வுகளை (TNPSC Exam 2022) சிறந்த முறையில் நடத்திக்கொண்டு வருகிறது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டு மக்கள் அநேகம் பேர் கலந்து கொண்டு வெற்றி அடைகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக பணியும் வழங்கப்பட்டு வருகிறது.

Important Tips at TNPSC Exam 2022

Important Tips at TNPSC Exam 2022

TNPSC EXAM 2022

இந்த புதிய ஆண்டின் (YEAR OF 2022) துவக்கத்திலேயே தேர்வுகளை நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளபடி, வருகிற ஜனவரி 20 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறப் போகிறது. அந்த தேர்வு (TNPSC Exam 2022) எழுதப்போகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சில முக்கியமான அறிவுரைகளை டிஎன்பிஎஸ்சி தொகுத்து வழங்கியுள்ளது. அந்த அறிவுரைகளை கருத்தில் கொண்டு தேர்வு எழுத செல்லுங்கள். இல்லையென்றால், தேர்வு ஹாலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, கவனமாக படித்து முக்கிய அறிவுரைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்வு செல்லுங்கள்.

அதுமட்டுமில்லாமல், 2022 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற போகும் தேர்வுகளில் சில முக்கிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு முதல் நடைபெறும் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வுகள் மிக மிக முக்கியமானது என்று அறிவித்துள்ளது.

ALSO READ>>> TNPSC Group 4 VAO Exam Full Details

TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் பின்வருமாறு:

1. தேர்வு எழுதும் நபர்கள் எக்ஸாம் பேப்பரில் விடைகளை எழுதவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கருப்பு நிற மை பந்து முனை பேனாவை பயன்படுத்தாமல் வேறு பேனாவை பயன்படுத்தினால் விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் புறக்கணிக்கப்படும்.

2. தேர்வு எழுதப்போகும் எந்த ஒரு நபரும் முற்பகலில் நடைபெறப்போகும் தேர்விற்கு 09.15 மணிக்குப் பின்பதாக எக்ஸாம் ஹாலில் நுழையவோ 1.15 மணிக்கு முன்பதாக எக்ஸாம் ஹாலில் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3. தேர்வு எழுதப்போகும் எந்த ஒரு நபரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்பு தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள எக்ஸாம் ஹால் அமைந்துள்ள இடத்தினை ஈஸியாக தெரிந்துகொள்வதர்க்காக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் (Exam Hall Ticket) விரவுத்தகவல் குறியீடு (QR CODE) அச்சிடப்பட்டுள்ளது.

5. இந்த குறியீட்டு எண்ணை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து உங்களுடைய எக்ஸாம் ஹால் அமைந்துள்ள இடம் பற்றிய தகவல்களை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

6. எக்ஸாம் எழுதப்போகும் அறைக்குள் செல்போன் அல்லது வேறு ஏதாவது மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. தேர்வர்கள் தங்களுடைய அலைபேசி உட்பட மற்ற அனைத்து பொருட்களையும் எக்ஸாம் ஹாலில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டியது மிக மிக அவசியம். இருந்தாலும் சொந்த உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வு எழுதுபவர்களின் சொந்த முடிவாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை கவனமாக படித்து தேர்வு எழுத செல்லுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான திறவுகோலாக TNPSC தேர்வு அமைந்துள்ளது. சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெற ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


LATEST JOBS IN INDIA:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button