இந்த கிறிஸ்துமஸ்க்கு முட்டை, மைதா இல்லாமல் கேக் செய்யலாம் வாங்க..

In Christmas No Egg And No Maida Cake Recipe In Tamil

அனைவருக்கும் பண்டிகை என்றாலே ஒரு தனி ஆனந்தம் தான். அதிலும் வருடத்தின் கடைசி மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் வருடத்தின் முதல் நாளான புத்தாண்டு என்றால் தனி ஆனந்தம் வரும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கேக் தான். தற்பொழுது உள்ள சூழ்நிலையில், எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கேக் வெட்டுவது வழக்கமாக மாறிவிட்டது. விழாக்கள் என வரும்போது இனிப்பு வகைகள் தான் முதலில் நினைவிற்கு வரும். விதவிதமான கேக் வகைகள் முதல் இனிப்பு பண்டங்கள் போன்ற பல வகைகள் இந்த விழாக்களில் தயாரிக்கப்படுவது வழக்கம். விழாக்காலங்களில் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் வகையில் வீட்டிலே கேக் செய்யலாம். பேக்கரியில் விற்கப்படும் பொருட்களில் மைதா மற்றும் முட்டை தான் அதிக இடம் பெறும். ஆனால் ஒரு சிலருக்கு முட்டை மற்றும் மைதா போன்ற சில பொருட்கள் கலப்பதால் கேக்-யை விரும்பமாட்டார்கள். அதாவது சைவ பிரியர்கள் முட்டையை விரும்பமாட்டார்கள், சிலர் மைதா உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அதையும் விரும்ப மாட்டார்கள். எனவே முட்டை மற்றும் மைதா பயன்படுத்தாமல் மிகவும் ருசியான கேக் தயார் செய்ய முடியும். இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தாமல் கடலை மாவை கொண்டு ருசியான கேக் செய்யலாம்.

கடலை மாவில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி6, புரதங்கள் அதிக அளவில் உள்ளதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது மட்டும் இல்லாமல் உடலில் கொலாஸ்ட்ரால் அளவை குறைக்க செய்கிறது. மலசிக்கலை போக்குகிறது. கடலை மாவை பயன்படுத்தி அருமையான கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த கிறிஸ்துமஸ்க்கு முட்டை, மைதா இல்லாமல் கேக் செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

1. கடலை மாவு-100 கிராம்

2. சர்க்கரை பொடி-முக்கால் கப் அல்லது 170 கிராம்

3. தயிர்-250 மிலி

4. பேக்கிங் பவுடர்-1 1\4 தேக்கரண்டி

5. பேக்கிங் சோடா-1 டீஸ்பூன்

6. ஏலக்காய் தூள்-சிறிதளவு

7. வெண்ணிலா எசென்ஸ்-1 டீஸ்பூன்

ALSO READ >கிறிஸ்துமஸ் ரம் கேக் செய்வது எப்படி?

செய்முறை விளக்கம்:

Eggless Cake Recipe

கடலை மாவு, சர்க்கரை பொடி, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஏலக்காய் தூள், வெண்ணிலா எசென்ஸ் போன்ற அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்த கேக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிய பின்னர் அதை ஓவனில் வைத்து நீங்கள் கேக் செய்து கொள்ளாமல். உங்களுக்கு சாக்லேட் கேக் பிடிக்கும் என்றால் டார்க் சாக்லேட் கலந்து கொள்ளலாம். இதன் பின் நீங்கள் விருப்பபட்டால் கேக்கின் மேல் சிரப், செர்ரி பழம் போன்றவற்றை சேர்த்து கூடுதல் அழகு சேர்த்து கொள்ளலாம்.

இந்த கேக் மைதா மற்றும் கோதுமை மாவு பயன்படுத்தி செய்யும் கேக்குகளை விடவும் சுவையானதாகவும் ஆரோக்கியமான கேக்காகவும் இருக்கும் என்று நம்புகிறோம். வரபோகும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்திற்கு இந்த கேக்கை செய்து கொண்டாடுங்கள்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here