வெறும் 10 நாளில் 400 கோடி வசூலை அள்ளிய “டைகர் 3” படம்..!

In Cinema News The film Tiger 3 collected 400 crores in just 10 days

கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் “ஏக் தா டைகர்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை கபீர் கான் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, 2017 ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் “டைகர் ஜிந்தா ஹே” திரைப்படம் வெளியாகி இதுவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த இரண்டு திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது.

ALSO READ : வேலூரில் புதிய விமான சேவை… இனி பெங்களூர் டூ சென்னை வெறும் 4 மணி நேரம்தான்!

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு “டைகர் 3” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. “டைகர் 3” படத்திலும் சல்மான் கான், கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ளனர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படம் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகை நாளன நவம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், “டைகர் 3” படம் வெளியான 10 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும் இந்தியாவில் மட்டும் ரூ.298 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top