
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜவுளி கடைகள் இருக்கும் பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பல பணி நேரம் காத்திருந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ALSO READ : மக்களே அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
சாதாரணமான சாலைகளிலே இப்படி போக்குவரத்து நெரிசல் இருக்கும் பட்சத்தில் சென்னையை நினைத்து பாருங்கள் எந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்று? அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள திநகரில் சொல்லவே வேண்டியது இல்லை. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தடுக்கவே சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அங்கு ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது. அதன்படி, சென்னை டிநகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் பயணிகள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்க கூடாது. மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மக்கள் ஆட்டோகளை தவிர்த்து நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ளவும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.