உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பச்சை நிற உணவுகள் எதுன்னு தெரியுமா?

In Foods That Help You To Lose Weight In Tamil

மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஆனால் இப்போது இருக்கும் காலக்கட்டங்களில் நாம் ஆரோக்கியாமாக உள்ளோமா என கேட்டல் கேள்விக்குறி தான். ஏனெனில் மனிதர்கள் இந்த காலத்திற்கு ஏற்ப வேகமாக ஓடுகின்றனர். இதனால் உடலுக்கு சத்து உள்ள பொருட்களை உண்ணாமல் கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உணவுகள் என இவற்றையே உண்கிறோம். உடலில் கொழுப்பு அதிகரிக்க முதல் காரணம் ஆரோக்கியமற்ற உணவான கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வது தான். இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து ஒபிசிடி என பல பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கு. உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இதன் மூலம் ரத்த சர்க்கரை குறைப்பது, உடல் எடை குறைப்பது, கொழுப்பை குறைப்பது என பல பயன்களை பெறமுடியும்.

இந்திய சமையலில் உபயோகப்படுத்தும் பல பொருட்கள் நறுமணம் மிக்கவை. ஏலக்காய், பட்டை போன்றவை மனமூட்டியாகவும், சுவையூட்டியகவும் விளங்குகிறது. அத்துடன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நமது சமையலில் குறைவாக எண்ணெய் சேர்த்து சமைக்கும் போது அது ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிடுகிறது. இதன் மூலம் சர்க்கரை கட்டுபடுத்த முடியும் .உடல் எடை, கொழுப்பை குறைக்க முடியும். நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய சமையல் பொருட்கள் மூலம் பல பயன்களை அடைய முடியும். அந்த வகையில் கொழுப்பை எளிதில் குறைக்க உதவும் பச்சை நிற உணவுகளை பார்ப்போம்.

பச்சைப்பயிறு:

Green Beans

பச்சை நிறத்தில் உள்ள பாசிபயிரில் கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களுக்கு பச்சைபயிறு மிகவும் பொருத்தமான ஒன்று. இதில் விட்டமீன் ஏ, பி, சி, இ போன்ற சத்துகள் நிறைந்து உள்ளது. இத்தோடு கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து நிறைந்ததாக உள்ளது. உடலுக்கு மிகவும் தேவையான புரதம், நார்ச்சத்து இதில் அடங்கி உள்ளது. இதில் உடலுக்கு தேவையான சத்துகள் இருப்பதுடன் உடல் எடை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.

பச்சை மிளகாய்:

Green Chilly

உணவில் குறைந்த அளவில் பயன்படுத்தும் பச்சை மிளகாயில் கூட நிறைய பயன்கள் உள்ளது. காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயில் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க செய்கிறது. மிளகாயில் கேப்சையின் என்னும் சத்து மெடபாலிசத்தை அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைக்கிறது. மேலும் மெடபாலிச விகிதம் மூன்று மணி நேரத்திற்கு 23% அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பச்சை மிளகாய் உணவில் சேர்க்கும்பொழுது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ALSO READ >தனிமையை இனிமையாக்க சூப்பர் டிப்ஸ்..!

வெள்ளரிக்காய்:

Cucumber

உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க வெள்ளரிக்காய் ஒரு சிறந்த உணவாகும். அதில் நீர் சத்து நிறைய அளவில் இருக்கும். இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவி செய்கிறது. இதில் நீர்சத்து, வைட்டமின் சி, பல சத்துகள் உள்ளது. இதில் நீர்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இவை பசி எடுப்பதை குறைத்து நீர் சுரப்பை அதிகபடுத்தி உடல் எடை குறைக்கிறது. உடல் எடை குறைக்க விரும்பவர்களுக்கு சிறந்த மருந்தாக வெள்ளரிக்காய் இருக்கிறது.

ஏலக்காய்:

Cardamom

ஏலக்காய் மசாலா பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இது வாசனை மிகுந்த ஒன்றாக இருப்பதால் உணவுகளில் பயன்படுத்தபடுகிறது. இதில் விட்டமின் ஏ, பி, சி, நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி கொழுப்பை விரைவில் குறைக்கிறது. நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து எடை குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும் பண்பை கொண்டது.

ALSO READ >தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…!

கறிவேப்பிலை:

Curry Leaves

கறிவேப்பிலை இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கும் தன்மையும் கொண்டது. மேலும் கொழுப்புடன் சேர்த்து கழிவுகளை வெளியேற்றுகிறது. கருவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. உடல் எடை குறைய வேண்டும் என்றால் நாள்தோறும் கருவேப்பிலை துவையல், சட்னி செய்து அதை தோசை இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை உணவில் இருந்து ஒதுக்கி வைப்பதை இனி தவிர்த்து கொள்ளுங்கள்.

க்ரீன் டீ:

Green Tea

புத்துணர்ச்சி மற்றும் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பெரிதும் விரும்பி எடுத்து கொள்வது க்ரீன் டீ. மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உடல் எடை குறைக்க கிரீன் டீ உதவுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்டு இருப்பதால் புற்று நோய் வருவதை எதிர்த்து போராடுகிறது. இதை குடிப்பதால் பசி குறைந்து உணவு போதுமானதாக இருப்பதால் உடல் எடை குறைகிறது. உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதயம் மேம்பட இதை பலரும் பரிந்துரை செய்கின்றனர்.

ALSO READ >எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

கீரைகள்:

Keeraikal

கீரைகளில் அதிக அளவு உட்டசத்தும், குறைந்த அளவு கலோரிகளும் உள்ளது. கீரைகளில் இரும்பு சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரைகள் அடிப்படை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கீரையில் உள்ள தைலகாயிடு என்பது பசி உணர்வை கட்டுபடுத்தி உடல் எடை குறைக்க உதவுகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here