தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலபடுத்தப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கவே இந்த தடை காலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த மீன்பிடி தடைகாலமானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும். இந்த தடைகாலத்தின் போது மீனவர்களின் பொருளாதார கஷ்டத்தை போக்க 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மீன் பிடி தடைக்காலத்திர்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், இதற்கான நிவாரணத் தொகையானது 5000 ருபாயிலிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Also Read : கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகை : புத்தாடை அணிந்து 64 வகை உணவு சமைத்து உற்சாக கொண்டாட்டம்!
அதன் படி, மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5000ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டு தற்பொழுது அரசாணை வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெற இருக்கின்றனர்.