2 மாசத்துல வாங்க வேண்டிய அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் ஒரே மாசத்துல தராங்களாம்! ரேஷன் கார்டு இருக்கவங்களுக்கு சூப்பரான அறிவிப்பு!

ரேஷன் கார்டு இருக்கவங்களுக்கு சூப்பரான அறிவிப்பு
ரேஷன் கார்டு இருக்கவங்களுக்கு சூப்பரான அறிவிப்பு

தற்போது மாநில அரசு ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை முதலிய அத்தியாவசியமான பொருட்கள் மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஓன்று வந்துள்ளது. அந்த அறிவிப்பு என்ன என்றால்… இனி வரும் காலங்களில் ஒரே மாதத்தில் இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு பயன்பெறலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலத்தில் செயல்படுகிற அரசு ரேஷன் கடைகளை போது சேவை மையங்களாக மாற்றிட முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.

மேலும், அனைத்து ரேஷன் கடைகளும் பொது சேவை மையங்களாக மாறிய பிறகு… ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் அனைத்தும் இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பொது சேவை மையங்களில் அரசு ஊழியர்களை பணியமர்த்தலாம் என அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உங்களுடைய ஆதார் அட்டை புதுப்பிக்க… பான் கார்டு பெற்று கொள்ள… கிரெடிட்கார்டு வசதிகளை ஈசியாக பெற்றுக்கொள்ள முடியும்