குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..

In Winter Session Problems And Their Solutions In Tamil

பருவ மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தற்காத்து கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் சரும பாதிப்பு அதிகமாகவே ஏற்படும். தோல் பகுதிகள் வறட்சியாக இருக்கும். அத்துடன் அரிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மிருதுவான மென்மையான சோப்பை பயன்படுத்த வேண்டும். சருமத்தில் வெடிப்பு உள்ள பகுதியில் பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த களிம்பை பூசிக்கொள்வது நல்லது. குளிர்காலங்களில் சுத்தம் இல்லாத உணவு விடுதிகளில் உணவு உண்ணும் போது அது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக:

கோடைகாலத்தை காட்டிலும் குளிர்காலத்தில் உடல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டிசென்ட்டிரி, அமீபா சார்ந்த பேதி நோய் போன்ற கிருமியால் பாதிக்கப்பட்டு கெட்டு போன உணவால் வரும் வாந்தி, பேதி, வயிற்றுவலி மற்றும் காலரா, டைபாய்டு போன்ற பிரச்சனைகள் அதிகம் வரும். குளிர் காலத்தில் தான் பாக்டீரியா போன்ற கிருமிகள் நன்றாக வளரும் தன்மை உடையது. எனவே குளிர்காலத்தில் கூல்டிரிங்க்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..

1. வயிற்றுவலி

Vayirru vali

அதிக குளிரூட்டப்பட்ட உணவை சாப்பிடும் போது வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். முடிந்த வரை ஆரோக்கியமாக சாப்பிட கற்றுகொள்ளுங்கள். குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சி உள்ள பொருட்களான ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ சூடுபடுத்தப்பட்ட தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது சுடு தண்ணீரை தண்ணீர் பாட்டிலில் நிரப்பி கொண்டு செல்வது மிகவும் நல்லது. குளிர் காலத்தில் இரத்த குழாய்கள் சுருங்க தொடங்கும். இது போன்று காலங்களில் இரத்த நாளங்கள் சுருங்குவதால் தொடர்ந்து நடக்க முடியாமல் போய்விடும். அதனுடன் கால்களில் வலியும் சேர்ந்து வரும். இந்த மாதிரியான சமயங்களில் கால்களின் நிறம் சற்றும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் தான் நீரழிவு நோய் வருவதற்கு காரணமாக அமையும்.

2. மாரடைப்பு நோய்

Heart Attack

இதய தொடர்பான பிரச்சனை அல்லது மாரடைப்பு நோய் உள்ளவர்கள் அதிகமாக பனி பொழிவில் நடந்தாலோ அல்லது மாடிப்படிக்கட்டில் வேகமாக நடந்தாலோ மார்பில் வலி ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களுடைய கால்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்வது நல்லது. அது கால்களை வெதுவெதுப்பாக வைத்து கொள்ள உதவும். வீட்டிலேயே முடங்கி இருக்காமல் காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபயிற்சி செய்யலாம். மாரடைப்பு நோய் உள்ளவர்கள் மெதுவாக நடப்பது நல்லது. முடிந்த வரை உடற்பயற்சி செய்யுங்கள்.

ALSO READ >குளிர்காலத்தை சமாளிக்க சூப்பரான டிப்ஸ்..!

3. குளிர்கால வியாதிகள்

Winter Diseases

மாரடைப்பு நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் வெளியில் செல்லும் போது அத்தியாவசிய தேவைகளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அதாவது வெளில் செல்லும்போது மாரடைப்பு வலிக்கு தேவையான ஐசொடிரில் மாத்திரியை கையில் கொண்டு செல்ல வேண்டும். தைராய்டு குறைவாக சுரக்கும் நோயாளிகளுக்கு அதிக குளிரையை தாங்கி கொள்ளும் சக்தி கிடையாது. தாகம் ஏற்படுவது குறையும். இதனால் உடலில் தண்ணீர் இல்லாமல் வறட்சி தன்மை ஏற்படும். சோர்வு மற்றும் உடல் பலவீனம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் கால்களை தொடர்ச்சியாக தண்ணீரில் வைத்து கொண்டே இருந்தால் எலிஜூரம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குளிர்காலத்தில் அதிக பசி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்றவை வரும். உடலின் சூட்டை சற்றும் அதிகரிக்க கூடிய கம்பளி போன்ற ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

ஏற்ற உணவுகள்:

வெங்காயம், பீட்ரூட், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ளலாம். பழ வகைகளில் மாதுளம் மற்றும் கொய்யா சிறந்தது. பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

ALSO READ >குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..

4. பக்கவாதம்

Paralysis

குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு என்றால் அது சூடான உணவுகள் தான். குளிர்காலத்தில் சூப் சிறந்த ஒரு உணவு. எண்ணெயில் பொறித்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. ஒன்பது வயதிற்கு மேல் கடந்தவர்களுக்கு நிமோனியா , சளி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்க அதற்கு ஏற்ற ஒரு தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டால் நீண்ட ஆண்டுகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும். இதில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. ஆஸ்துமா, இருமல், சளி தொந்தரவு உள்ளவர்கள் ப்ளூ தடுப்பு ஊசியை போட்டு கொள்ளலாம். இந்த தடுப்பு ஊசியை வருடத்திக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும்.

தினம்தோறும் சிறிது நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் உடலில் உள்ள தசை மற்றும் மூட்டு இறுகிவிடும். பக்கவாதம், உதருவாதம் உள்ளவர்கள் தினம்தோறும் உடற்பயற்சி செய்வது கட்டாயம். குளிர்காலத்திலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவரின் அறிவுரை பெறவும். மேற்சொல்லப்பட்ட அனைத்தையும் மேற்கொள்வதன் மூலம் குளு குளு குளிர்காலத்தில் மகிழ்வுடன் வாழலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here