இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை அதிரடி உயர்வு..! தமிழக அரசின் அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இதுவரை இடம்பெறவில்லை. அவர்களின் நலனுக்காக இந்த குறையை கண்டறிந்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். ஏனெனில், மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் ஒலிம்பிக், உலகக் கோப்பை, காமன் வெல்த் ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர்.

Incentives for these sportspersons have increased dramatically Tamil Nadu Govt Ordinance Release read it now

இந்நிலையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு மூத்தோர் பிரிவில் வெள்ளி, தங்கம், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகை முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் என்று வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Also Read : யாரை கேட்டு இத பண்ணீங்க… விராட் கோலியை எச்சரித்த பிசிசிஐ..! எதற்கு தெரியுமா?