வருமான வரி ஸ்லாப் பட்ஜெட் 2023-24 – உங்கள் வரியை கணக்கிடும் முறைகள் வெளியீடு!

Income Tax Slab Budget 2023-24 Methods to Calculate Your Tax Released
Income Tax Slab Budget 2023-24 Methods to Calculate Your Tax Released

Income tax Slab Budget 2023-24: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் நீண்ட நாட்களாக வருமான வரி விலக்குக்காக காத்திருந்தனர். பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்களுக்கு, அதனை பொய்க்காத வண்ணம் 2023-24 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். முன்னதாக இந்த தள்ளுபடி ரூ.5 லட்சம் வரை கிடைத்தது. இதனுடன் வருமான வரி அடுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள்.

2020 ஆம் ஆண்டில், 2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் புதிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தினேன். இப்போது இந்த அமைப்பில் உள்ள வரி கட்டமைப்பை மாற்றவும், அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்கவும், வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக அதிகரிக்கவும் முன்மொழிகிறேன்.’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

2023 இன் புதிய வருமான வரி வரம்பு

புதிய வரி விதிப்பு திட்டத்தில் 0 – 3 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.
3 – 5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்களுக்கு 5% வருமான வரியும்,
6 – 9 லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்றால் 10% வரியும்
12 – 15 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20% வரியும்
15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால் 30% வரி வசூலிக்கப்படும்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here