ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா! இந்தியாவின் எதிர்காலம் பற்றி பிரதமர் மோடி பேச்சு

India assumed the leadership of G20 Prime Minister Modi's speech on the future of India-India G20 Agenda Will Be Inclusive In PM Modi

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியாஇன்று ஏற்கிறது. ஜி-20 அமைப்பின் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை தளர்த்துதல் ஆகியவை அடங்கும். இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், மேலும் வளர்ச்சியடைவோம்.

இதையடுத்து, இந்தியாவின் ஜி-20 தலைமை பொறுப்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். மேலும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும். நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச்சூழல்களில், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஜி-20 தலைமை பொறுப்பின்போது நாம் இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும். ஜி-20 முன்னுரிமைகள், ஜி-20 உறுப்பு நாடுகளுடனான ஆலோசனைகளோடு மட்டுமே வடிவமைக்கப்படாமல், இதுவரை இவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, தென்பகுதி நாடுகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே பூமியை சீர் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஒரே குடும்பம் என்ற நல்லிணக்கத்தை வளர்த்து, ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் தனித்துவமான கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க விரும்புகிறோம். நாம் இணைந்து ஜி20-ஐ உலகளாவிய மாற்றத்தின் கருவியாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here