
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், தினமும் கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்த ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கபட்டனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது.
மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் பொருட்களுடன் சேர்த்து 5 கிலோ உணவு தானியங்களும் இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு முடிந்த பிறகும் பொருளாதார சூழல் காரணமாக இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு அடுத்த மாதத்துடன் இந்த இலவச ரேஷன் திட்டம் முடிவடைய உள்ளது.
ALSO READ : என்னடா இது! இளைஞர்களுக்கு வந்த சோதனை! கல்யாணம் பண்ண பொண்ணு வேணும்னு 160 கி.மீ பாதயாத்திரை!
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து தற்பொழுது பிரதமர் மோடி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, “பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா” மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் முன்னுரிமை குடும்ப(PHH) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் என 80 கோடி மக்கள் அடுத்த 5 ஆண்டுக்கு பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.