பொது போக்குவரத்துக்காக 75 பஸ்களை வழங்கிய இந்தியா..!

India provided 75 buses for public transport..-There Are Many Buses Provide To Sri Lanka

இந்திய அரசு இலங்கையில் பொது போக்குவரத்திற்காக 75 பஸ்களை வழங்கி உதவி செய்துள்ளது. இலங்கையில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில் இந்தியா இலங்கைக்கு இந்த உதவியைச் செய்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கை தற்போது அதன் நட்பு நாடுகளின் உதவியைப் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா இலங்கையின் பொது போக்குவரத்திற்காக 75 பயணிகள் பஸ்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது இலங்கையில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியா 500 பொது போக்குவரத்திற்காகப் பயணிகள் பஸ்களை இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here