ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதத்தால் இந்திய கிரிக்கெட் அணி 385 ரன்கள் குவிப்பு! நியூசிலாந்து அணி இலக்கை எட்டுமா?

Rohit Sharma and Subman Gill century Will Team New Zealand reach the target
Rohit Sharma and Subman Gill century Will Team New Zealand reach the target

Rohit Sharma and Subman Gill century: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். முதல் பந்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். பின்பு, சுப்மன் கில்லும் சதம் அடித்து மாஸ் காட்டினார். ரோகித் சர்மாவிற்கு இது 30வது சதமாகும். தற்போது இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு 386 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய சுப்மன் கில், ரோஹித் வியப்பு, அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 13 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 112 (78) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் இதுவரை விளையாடிய 21 இன்னிங்ஸில் 4 சதங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சிகர் தவான் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனையும் படைத்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here