
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Faculty, Office Assistant, Attender பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27/11/2023 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது. விண்ணப்பக்கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் தென்காசி, திருநெல்வேலியில் வேலை செய்வார்கள். வயது வரம்பு அதிகபட்சமாக 40 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ALSO READ : JIPMER நிறுவனத்தில் வேலை! புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் வேலை செய்யலாம்!
Faculty பணியில் ஒரு காலியிடமும், அலுவலக உதவியாளர் பணியில் 3 காலியிடமும், அட்டெண்டர் பணியில் ஒரு காலியிடமும் உள்ளது. ஆசிரியர் பணிக்கு B.Sc,BA,B.Ed,அலுவலக உதவியாளர் பணிக்கு Degree,அட்டெண்டர் பணிக்கு 10 வது படித்திருக்க வேண்டும். மேலும் சம்பளம் Facultyக்கு ரூ.20,000, அலுவலக உதவியாளர்க்கு ரூ.12,000, அட்டெண்டர்க்கு ரூ.8000 வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Demonstration/Presentation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
IOB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Career/Advertisement மெனுவை தேடவும். பிறகு Faculty, Office Assistant, Attender கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பார்த்து கொள்ளவும். மேலும் அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து அதில் குறிபிட்டுள்ள தேவையான ஆவணங்களையும் இணைத்து அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தினை ஒரு Copy எடுத்து வைத்து கொள்ளவும். அதனை கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
திருநெல்வேலி அஞ்சல் முகவரி :
The Director,
RSETI Tirunelveli,
A-63, 5th Cross Street(First floor),
Maharaja Nagar Colony, Tirunelveli- 627011.
தென்காசி அஞ்சல் முகவரி :
The Director,
RSETI Tenkasi,
Plot no 1, Door No 2/10/59,
High land City, Elathur to Tenkasi road,
Tenkasi – 627803.
மேலும் விவரங்களை அறிய Official Notification மற்றும் Application form பார்த்து தெரிந்து கொள்ளவும்.